ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறிக்கொண்டு மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்து, தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அவரைக் கைது செய்திருந்தது. 

 குறித்த சந்தேகநபர் 11/ 9, புனித செபஸ்டியன் மாவத்தை, மொரட்டுவை எனும் முகவரியை சேர்ந்தவராவார். 

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற இந் நபர் மொரட்டுவை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஆஜர்செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனவரி 09ஆம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.