சிறிய ரக விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு : லூசியானாவில் சம்பவம்!

By R. Kalaichelvan

29 Dec, 2019 | 03:45 PM
image

லூசியானாவில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரண்டு விமானிகள் கொண்ட இச் சிறிய ரக விமானமானது பைபர் செயென் விமான நிலையத்தில் இருந்து புற்பட்ட ஒரு மைல் தூரத்தில் லாபாயெட் நகரில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

லூசியானாவின் தபால் நிலையமொன்றின் வாகனங்கள் தரிப்பிடத்திலேயே  விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த விமானத்தில் அந்நாட்டின் பிராந்திய விளையாட்டு செய்தியாளரான  கார்லி மெக்கார்ட் விளைாயட்டு போட்டி ஒன்றின் செய்தி தொகுப்பிற்காக அவ் விமானத்தில் பயணித்துள்ளதோடு , சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்தோடு சம்பவம் தொடர்பில்  அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right