எகிப்து நாட்டில் இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

எகிப்து நாட்டின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியை நோக்கி பயணித்த இரு சொகுசு பஸ்கள் கெய்ரோ நகரில் லொறி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்னானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு , 24 பேர் வரையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எகிப்தின் போர்ட் செட் மற்றும் டேமியேட்டா ஆகிய நகரங்களுக்கு இடையிலான வீதயில் பஸ் ஒன்றும் கார் ஒன்றும்  மோதியதில் துணித்தொழிற்சாலையில் பணிபுரியும் 22 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளதோடு , 8 பேர் வரையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருவிபத்துக்களிலும் மொத்தமாக 28 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.