நியூயோர்க் நகரின் வடக்கே உள்ள யூத வழிபாட்டு தலமொன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக நியூயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நியூயோர்க் நகரத்திலிருந்து 35 மைல் வடக்கே சுமார் 18,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட மொன்சியில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்திலேயே இந்த கத்திகத் குத்து சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.