(அட்டன் நிருபர்)    

வெளி­யான க.பொ.த. உயர்­தரப் பரீட்சை பெறு­பே­று­களின் அடிப்­ப­டையில், அட்டன் ஹைலண்ட்ஸ் கல்­லூரி மாண­வர்கள்  சிறந்த பெறு­பே­று­களை பெற்­றுள்­ளனர். பௌதீக விஞ்­ஞான பிரிவில் அட்டன்–டிக்­கோயா பகு­தியை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, ராம் பிரசாத் என்ற மாண­வன் 3ஏ  பெறு­பேற்றை பெற்று நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் முதல் நிலை ­பெற்­றுள்ளார்.

மேலும்,  உயி­ரியல் விஞ்­ஞான பிரிவில் அட்டன் நகர் பகு­தியை வசிப்­பி­ட­மா­கக் ­கொண்ட, ஸ்ரீ மதுஷான் என்ற மாண­வன் 3ஏ பெறு­பேற்றை பெற்று நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் முதல்நிலை­ பெற்­றுள்ளார்.

அத்­தோடு, அட்டன் ஹைலண்ட்ஸ் கல்­லூ­ரியின் மாணவி, நுண்­கலை பிரிவில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் முதலாம் இடத்­தினை பெற்று சாதனை படைத்­துள்ளார்.

தல­வாக்­கலை பகு­தியை வசிப்­பி­ட­மா­கக் ­கொண்ட,  ஆர்.கபிஷா என்ற மாண­வி 3ஏ பெறு­பேற்றை பெற்று நுவ­ரெ­லியா  மாவட்­டத்தில் முதல் நிலை­பெற்­றுள்ளார்.

மேலும், தொழில்­நுட்ப பிரிவில் வட்­ட­வளை பகு­தியை வசிப்­பி­ட­மாகக்  கொண்ட, எம்.மெரினா என்ற மாண­வி 3ஏ  பெறு­பேற்றை பெற்று நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் முதல் நிலை­ பெற்­றுள்ளார்.

இம்­முறை இந்த கல்­லூ­ரி­யி­லி­ருந்து 130 மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரிவாகியுள்ளமை சிறப்பம்சமாகும் என கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.