இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் பயணித்த மூன்று மீன்பிடி படகுகளையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

அத்துடன் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள உதவி மீன்வத்துறை இயக்குனரிடம் ஒப்படைக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது.