மேசையின் விளிம்பில் வைக்கப்பட்டிருந்த சுடுநீர் பாத்திரத்தை தவறுதலாக தட்டியதில் உடல் முழுவதும் எரிகாயங்களுக்குள்ளான ஆண்குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லினக்கபுரம் கீரிமலை பகுதியைச் சேர்ந்த கஜீபன் சகாஸ் என்ற ஒரு வயது நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குழந்தைக்கு பால் கரைப்பதற்கு சுடுநீரை தயாரித்த தாய் அப்பாத்திரத்தை மேசையின் விளிம்பில் வைத்து விட்டு பால்மா பெட்டியை எடுக்க அறைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் குழந்தை மேசை விரிப்பு சீலையை இழுத்துள்ளது இதனால் விளிம்பில் வைக்கப்பட்ட சுடுநீர் பாத்திரம் குழந்தை மீது ஊற்றுண்டுள்ளது.
உடனடியாக குழந்தையை எடுத்துச் சென்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
எனினும் வெள்ளிக்கிழமை (27) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலகர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM