புலமை பரீட்சைக்கான உதவித் தொகையை இணைய வழியில் வழங்கத் தீர்மானம்

Published By: Daya

28 Dec, 2019 | 04:32 PM
image

ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் இணையதளம் மூலம் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனக்  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் சித்தி  பெற்ற சகல மாணவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி இணையவழி மூலமாகக் கணக்கு புத்தகத்தில் பணத்தைப் பெற்றுக்கொள்ளக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

சகல பாடசாலைகளுக்கும் சென்று உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடைய  சகல மாணவர்களின் தரவுகளைப் பெற்று அதற்கமைவாக  அட்டவணை தயாரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு வருடமும் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் ஐந்தாம் தரப் புலமை பரீட்சையில் தோற்றுவார்கள் இதில் மாதாந்தம் 15ஆயிரம் ரூபாவிற்கு வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

இந்நிலையில், ஐந்தாம் தர புலமைப்பரீட்சையில் தோற்றிச் சித்தியடைந்த மாணவர்களுக்கு 6 ஆம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரை இவ்வுதவித் தொகை வழங்கப்படும். 

குறித்த உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள  ஒவ்வொரு மாணவர்களும் மாதாந்தம் வவுச்சர் மூலம் விண்ணப்பிக்கும் முறையானது இதுவரைகாலமும் இருந்தது. இதனால் கால தாமதம், சிரமங்களை எதிர்நோக்கவேண்டியிருந்தது. இதனைத் தவிர்க்க தற்போது இணையவழி மூலமாக மாணவர்களின் கணக்கில் நேரடியாக மாற்றக் கூடிய வகையில் இலகு முறையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அதன் படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து சகல அரச பாடசாலைகளுக்கும் இணையவழி மூலமாக உதவித் தொகை வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44