ஐக்கிய தேசியக் கட்சியினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் தேசிய அரசாங்கத்தை சீர்குலைக்கும் மஹிந்தவின் எண்ணமே எனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையாகும் என நிதியமைச்சர் ரவிகருணாநாயக தெரிவித்தார். 

எனவே, எதிர்வரும் 8 ஆம் திகதி எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமை வெளிப்படுத்தப்படும் தினமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

எதிர்வரும் 8 ஆம் திகதி நிதியமைச்சர் ரவி கருணாநாயகவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் கேட்டபோதே, நிதியமைச்சர் ரவிகருணாநாயக மேற்கண்டவாறு தெரிவித்தார்.