சோமாலிய கார் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 60 ஆக உயர்வு!

By Vishnu

28 Dec, 2019 | 03:49 PM
image

சோமாலியாவின் தலைநகர் மொகதீஷுவில் இன்று காலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் தொகை 60 ஆக அதிகரித்துள்ளதாக 'Sky News' சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த தாக்குதல் காரணாக மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளமையினால் உயிரிழப்புகள் அதிரிக்கக்கூடும் எனவும் அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் காரணமாக பொது மக்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே அதிகாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மொகதீஷுவில் உள்ள வாகன சோதனைச் சாவடியொன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதுவரை எந்தவொரு அமைப்பும் மேற்கண்ட தாக்குதலுக்கு பொறுப் பேற்க்காத நிலையில் அல் ஷாபாப் இயக்கத்தைச் சேர்ந்தோர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1991 இல் இருந்து சோமாலியா நாடு வன்முறை மோதல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. அல்-கொய்தாவுடன் இணைந்த அல்ஷபாப் தீவிரவாதம் இயக்கம்  நடத்திய கார் குண்டுகள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களால் தலைநகர் தொடர்ந்து சீர்குலைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான...

2022-09-29 14:31:59
news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04
news-image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

2022-09-28 09:21:33