மெக்ஸிக்கோவில் கடந்த நவம்பர் மாதம் மூன்று பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பொலிஸ் தலைமை அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி மெக்ஸிக்கோவின் சிவாவா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மேற்கண்ட அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தோர் உயிரிழந்திருந்தனர்.

இது தொடர்பில் இடம்பெற்று வந்த விசாரணையில் ஏற்கனவே பலர் கைதுசெய்யப்பட்ட நிலையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் சிவாவாவில் உள்ள ஜானோஸ் நகராட்சியின் பொலிஸ் தலைமை அதிகாரியான பிடல் அலெஜான்ட்ரோ வில்லேகாஸ் என்பவர் ஆவார்.