இந்தியாவில் மும்பை - புனேவிற்காக அதிவேக நெடுச்சாலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த சொகுசு பஸ்ஸானது இரு கார்களுடன் மோதி பள்ளத்தில் வீழ்ந்ததினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும் முன் விபத்துக்குள்ளானவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.