(ஆர்.யசி)

கல்வி பொதுத் தரா­தர உயர்­தர பரீட்சை பெறு­பே­றுகள் நேற்­றி­ரவு வெளி­யா­கி­யுள்ள நிலையில் இம்­முறை பரீட்­சை­க­ளுக்கு  2 இலட்­சத்து 81 ஆயி­ரத்து 786 பேர் தோற்­றி­யி­ருந்த நிலையில் இவர்­களில்  ஒரு இலட்­சத்து 81 ஆயி­ரத்து 126 பேர் பல்­க­லைக்­க­ழக பிர­வே­சத்­திற்கு தகுதி பெற்­றுள்­ளனர். அதேபோல் பெறு­பே­றுகள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள பரீட்­சார்த்­தி­களின் எண்­ணிக்கை 71 ஆகும். 

கல்வி பொதுத் தரா­தர உயர்­தர பரீட்சை பெறு­பே­றுகள் நேற்று இரவு வெளி­யா­னது. அதற்­க­மைய  கடந்த ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற கல்வி பொதுத் தரா­தர உயர்­தரப் பரீட்­சையில் 2 இலட்­சத்து 81 ஆயி­ரத்து 786 பேர் தோற்­றி­யி­ருந்­தனர். இதில் புதிய பாடத்­திட்­டத்­திற்கு அமைய மூன்று பாடங்­க­ளிலும் தோற்­றிய விண்­ணப்­ப­தா­ரி­களின் எண்­ணிக்கை ஒரு இலட்­சத்து 87 ஆயி­ரத்து 167 ஆகும்.  பழைய பாடத்­திட்­டத்­திற்கு  அமைய மூன்று பாடங்­க­ளுக்கும் தோற்­று­வித்த மாண­வர்­களின் எண்­ணிக்கை 94 ஆயி­ரத்து 619 பேராகும்.  இவர்­களின் புதிய பாடத்­திட்­டத்­திற்கு அமைய 113,637 மாண­வர்­களும், பழைய பாடத்­திட்­டத்­துக்கு அமைய 67 ஆயி­ரத்து 489 மாண­வர்­க­ளு­மாக மொத்­த­மாக ஒரு இலட்­சத்து 81 ஆயி­ரத்து 126 பேர் பல்­க­லைக்­க­ழக பிர­வே­சத்­திற்கு தகுதி பெற்­றுள்­ளனர்.  அத்­துடன் பெறு­பே­றுகள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள பரீட்­சாத்­தி­களின் எண்­ணிக்கை 71 ஆகும். 

மேலும் பெறு­பே­றுகள் மீளாய்வு தொடர்­பான விண்­ணப்­பிக்­க­கூ­டிய இறுதி திகதி ஜன­வரி மாதம் 7 ஆம் திக­தி­யாகும் என்று பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. அத்­துடன் பாட­சாலை பரீட்­சாத்­தி­க­ளுக்­கான மீளாய்வு தொடர்­பான விண்­ணப்ப படி­வங்கள் பெறு­பேற்று ஆவ­ணங்­க­ளுடன் பாட­சாலை அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வ­துடன் தனிப்­பட்ட பரீட்­சாத்­திகள் பரீட்சை திணைக்­க­ளத்­தினால் தேசிய பத்­தி­ரி­கை­களில் பிர­சு­ரிக்­கப்­படும் அறிவித்தல்களுக்கு ஏற்ப விண்ணப்பப்படிவங்களை பூரணப்படுத்தி அனுப்ப வேண்டும். மேலும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திலும் பார்வையிட முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.