தனது கொள்கை வட்டி வீதத்தை எந்தவித மாற்றமும் இன்றி முன்னெடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைவாக நிலையான வைப்பு வசதியை 7.7 சதவீதமாகவும், நிலையாக கடன் வசதிக்கான சதவீதத்தை 8 சதவீதமாகவும் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நிதிச் சபை திர்மானித்துள்ளது.

சட்ட ரீதியிலான இருப்பு வீதம் 5 சதவீதமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதன் மூலம் பண வீக்கத்தை 4 தொடக்கம் 6 சதவீதத்திற்கு உட்பட்டதாக உத்தேச வித்தியாசத்தில் முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கொள்கை வட்டி வீதம் தொடர்பில் அடுத்த மதிப்பீடு எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)