சர்வதேச நாணய நிதியமானது இலங்கைக்கு 1.5 அமெரிக்க டொலரை கடனாக வழங்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கடன் தொகையானது அந்நிய செலாவணியை அதிகரிக்கும் செயற்பாடுகளுக்காக குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படவுள்ளதாக நேற்று நிதியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.