இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்குவதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவரது இசைக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவரது இசையில் சைக்கோ, தமிழரசன், துப்பறிவாளன் 2, கிளாப், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இளையராஜா இசைக்காக இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்குவதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த விருதை அடுத்த மாதம் 15ஆம் திகதி  சபரிமலை சன்னிதானத்தில் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.