அரசியல் குறுக்கீடு மற்றும் ஒழுங்கற்ற நடவடிக்கைகள் இன்றி அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீள் குடியேற்றம் செய்தல் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதைவேளை, மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் குடியேற்றத்திற்குத் தேவையான காணிகளை பெற்றுக்கொடுக்குமாறும் வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிந்துள்ளார்.