திருகோணமலை ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

ஹொரவப்பொத்தானை - ரம்பேவ  பகுதியைச் சேர்ந்த 40 வயதான இந்திக பண்டார  என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹொரவப்பொத்தானை நகர்ப்பகுதியிலிருந்து அவரது வீட்டுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது பின்னே வருகை தந்திருந்த மாட்டார் சைக்கிள் மோதியதாகவும் பொலிஸ் ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த  அக்கர சீய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய  ஆதம்பாவா முகம்மது றிப்னாஸ் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலம்  ஹொரவப்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.