ஏமனில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளதாவது,

ஏமன் நாட்டின் வடக்கில் உள்ள சடா நகரின் சந்தைப் பகுதி ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் வான்வழி தாக்குதுல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஏமனின் சடா நகரிள்ள அல் ரக்ஹ் சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பொதுமக்கள் உயிரிழந்துள்னர்.

இம்மாதத்தில் மாத்திரம் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

அத்தோடு இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 12 பேர் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர்கள் என ஐ.நா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தாக்குதல்களுக்கு ஐ.நா கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.