மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பப்பாளிப் பழச்செய்கை முற்றாக அழிந்து சேதமாகியுள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாவட்டத்தில் சுமார் 25 ஏக்கரில் பப்பாளிப் பழச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவைகள் யாவும் நீரில் மூழ்கி வேர்கள் அழுகி அழிவடைந்துவிட்டதாக விவசாய திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


இம்மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி, வாகரை, ஆரையம்பதி,  உட்படப் பல கரையோர பிரதேச செயலகப்பிரிவுகளில் பப்பாளிச் செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.