அணு ஆயுத ஏவு­க­ணை­களின் கட்­டுப்­பாட்டை  தன்­னி­யக்க ரீதியில் செயற்­படும் செயற்கை  மதி­நுட்­பத்­திடம் (செயற்கை மதி­நுட்ப  உப­க­ர­ணங்­க­ளிடம்) கைய­ளிப்­பது  அணு ஆயுதப் போரொன்று ஏற்­ப­டு­வ­தற்கு வழி­வகை செய்­யலாம் என  உயர்­மட்ட அணு­சக்தி விஞ்­ஞா­னிகள் எச்சரித்­துள்­ளனர்.

தன்­னி­யக்க இயந்­தி­ரங்­களில் தங்­கி­யி­ருப்­ப­தி­லான அதி­க­ரிப்பு இயந்­தி­ரங்கள்  கட்­டுப்­பாட்டை இழப்­ப­தற்கு வழி­வகை செய்­யலாம் என அமெ­ரிக்க நியூயோர்க் நக­ரி­லுள்ள கொர்னெல் பல்­க­லைக்­க­ழ­கத்தைச்  சேர்ந்த விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.

புரிந்­து­கொள்ள முடி­யாத வகை­யான ஆபத்து இருக்­கின்றபோதும் அமெ­ரிக்­காவின் ஆற்­றல்­களை எட்டிப்பிடிக்க ரஷ்­யாவும் சீனாவும் தொழில்­நுட்­பங்­களில் மேலும் நம்­பிக்கை வைக்­கலாம்  எனத் தெரி­வித்த  மேற்­படி விஞ்­ஞா­னிகள்,  இரா­ணுவ சக்­திகள் தொழில்­நுட்­பத்தில் செயற்கை மதி­நுட்பம் பாது­காப்­பான வழி­முறை என நம்­பிக்கை வைப்­பதான­து  அது தொடர்­பான விபத்­தொன்று ஏற்­படும் வரையில் பகி­ரங்­க­மாக்­கப்­ப­டாது  மறைந்­தி­ருக்கும் அபா­ய­மொன்றைக் கொண்­டு­வ­ரலாம் என எச்­ச­ரித்­துள்­ளனர்.

அந்த வகையில் ரஷ்யா ஏற்­க­னவே பொஸெய்டன் அல்­லது ஸ்ரேட்டஸ்– 6 என்ற தன்­னி­யக்க அணு­சக்தி நீர்­மூழ்கிக்  குண்­டொன்றை அபி­வி­ருத்தி செய்யும் நட­வ­டிக்­கையை ஆரம்­பித்து செயற்கை மதி­நுட்பம் தொடர்பில்  புதிய போக்குகொன்றுக்கு வித்திடக்கூடிய களத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விஞ்ஞானி கள் தெரிவித்தனர்.