குதிக்கால் வெடிப்பை நீக்குவது எப்படி.?

Published By: Robert

05 Jun, 2016 | 10:21 AM
image

நமது மொத்த உடல் பாரத்­தையும் அந்த சிறிய பாதங்­கள்தான் தாங்­கு­கின்­றன அதி­கப்­ப­டி­யான அழுத்தம் பாதங்­க­ளுக்கு ஏற்­ப­டும்­போது பாதத்தில் இருக்கும் கொழுப்பு படி­வங்கள் விரிந்து வெளி­வரப் பார்க்கும். உங்கள் பாதம் வறண்­டி­ருந்தால்,அல்­லது பாதம் தெரி­யும்­படி காலணி அணி­வ­தனால் அவை எளி­தாக தோலினைப் பிளக்­கின்­றன.அதுதான் பாதத்தில் வெடிப்பு வர காரணம். நீங்கள் சற்று கவ­னித்­தீர்­க­ளே­யானால், ஷூ மற்றும் கட் ஷூ அணி­ப­வர்­க­ளுக்கு வெடிப்­புகள் வராது. காரணம் குதி­கால்கள் இறுக்­க­மாக மூடி இருப்­ப­தனால் வெடிப்­புகள் ஏற்­ப­டாது.

பாத­வெ­டிப்­புகள் பெரும்­பாலும் பெண்­க­ளுக்கு வரும். அதி­கப்­ப­டி­யான வெப்­பத்­திலும், குளி­ரிலும் வெடிப்­புகள் வரலாம். சில­ருக்கு பிளவு ஆழ­மாக சென்று வலியை ஏற்­ப­டுத்தும். இன்னும் சில­ருக்கு இரத்தம் வரும். எளிதில் போகக் கூடிய இந்த பாத வெடிப்­பிற்கு கடை­களில் வாங்கும் க்ரீம்கள் உட­னடி பலன் கொடுத்­தாலும், அவை திரும்ப திரும்ப வரும். வீட்­டி­லேயே இதற்கு தீர்வு காண இந்த கட்­டுரை உதவும். கீழே சொல்­லி­யி­ருக்கும் இரண்டு முறை­க­ளுமே உங்கள் பாதத்தின் வெடிப்­பு­க­ளுக்கு சிறந்த தீர்­வாகும். எப்­படி செய்­வது எனப் பார்க்­கலாம்.

செய்­முறை 1: ரைஸ் வினி

ரைஸ் வினிகர் அரி­சியை பதப்­ப­டுத்தி செய்­யக்­கூ­டிய வினிகர். இது,பாதங்­களில் ஏற்­படும் வெடிப்­பிற்கு சிறந்த பலனைத் தரும். கால்­களை மிரு­து­வாக்கும், வெடிப்­பு­களை நீங்கச் செய்யும். ஒலிவ் ஒயில் சரு­மத்­திற்கு கிடைத்த ஒரு­வரப் பிர­சா­த­மாகும். பாதத்தில் இருக்கும் சொர­சொ­ரப்­பி­னையும்,கடி­னத்­தன்­மை­யையும் நீக்கி, பஞ்சு போலாக்­கு­கி­றது.உப்பு இறந்த செல்­களை நீக்­கு­கி­றது. பாதத்தின் வெடிப்­பு­க­ளினுள் தங்கும் கிரு­மி­களை அழிக்­கி­றது.தொற்­றுக்­களை நீக்கும்.

தேவை­யா­னவை:

ரைஸ் வினிகர் :1 டேபிள் ஸ்பூன் ஒலிவ் ஒயில்- 1 டேபிள் ஸ்பூன் உப்பு- 2 டேபிள் ஸ்பூன்

ஒரு டப்பில் பாதங்கள் மூழ்கும் அள­விற்கு,பொறுத்துக் கொள்ளும் சூட்டில்,சுடு நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மேலே சொன்ன மூன்­றையும் போட்டு கலக்க வேண்டும். பின் அதில் பாதங்­களை, 20 நிமி­டங்கள் வைக்க வேண்டும்.பின் வெடிப்­புக்­கான க்ரீமினை போடவும். இவ்­வாறு தினமும் செய்தால், ஒரே வாரத்தில் வெடிப்பு போய் பாதங்கள் அழ­கா­கி­விடும்.

செய்­முறை 2: தேவை­யா­னவை : சோற்­றுக்­கற்­றாழை தேன் கிளி­சரின் பெட்­ரோ­லியம் ஜெல்லி

சோற்­றுக்­கற்­றாழை, தேன் ,கிளி­சரின் பெட்­ரோ­லியம் ஜெல்லி கொண்டு செய்யும் இந்த ஜெல் மிகச் சிறந்த பலன்­களைத் தரும். சோற்றுக் கற்­றாழை சரு­மத்­திற்கு அற்­பு­தத்தை தரும் மூலிகைச் செடி­யாகும். தேன் கிருமி நாசினி. பாதங்­களின் பிளவு மிக ஆழ­மாக இருந்தால், கிளி­சரின் தவிர வேறெ­துவும் இதற்கு தீர்வு தராது. பெட்­ரோ­லியம் ஜெல்லி வெடிப்­பிற்கு மிகச் சிறந்த மருந்­தாகும்.

இது உட­ன­டி­யாக செயற்ப­டு­வதால், வெடிப்­புகள் வேக­மாக குறையும். இந்த நான்கும் சேர்த்து செய்யும் கலவை பாதங்­களில் மேஜிக் செய்யும் என்றால் மிகை­யா­காது. இதனை வீட்டில் முயன்று பாருங்கள். நீங்­களே உணர்­வீர்கள். சோற்­றுக்­கற்­றா­ழையின் சதைப்­ப­கு­தியை எடுத்து, அத­னுடன், தேன், கிளி­சரின் சேர்த்து நன்கு கலக்­கவும். பின் அத­னுடன் சிறிது பெட்­ரோ­லியம் ஜெல்­லி­யையும் கலந்து தினமும் இரவில் தேய்க்­கவும். மறு நாள் காலையில் ஸ்க்ரப் செய்யவும். இறந்த செல்கள் அகன்று, கால்கள் நாளடைவில் மிருதுவாகும்.

மாதம் ஒரு முறை பார்லரில் பெடிக்யூர் செய்து கொள்வது வெடிப்பு வராமல் தடுக்கும். தினமும் பாதங்களை ஸ்க்ரப் செய்வது மிக முக்கியம் அப்போதுதான் அழுக்குகள் நீங்கி, பாதங்கள் மிருதுவாகும். கூடுமானவரை வீட்டினுள் சொக்ஸ் அணிந்து கொள்வது வெடிப்பு வராமல் காக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15