கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் !

By R. Kalaichelvan

26 Dec, 2019 | 10:32 PM
image

இம் மாதத்தில் கடந்த 24 நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10,025 ஆக பதிவாகியிருப்பதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,178 என்றும் பதிவாகியுள்ளது.

இதேவேளை இந்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆகும்.

இந்த மாதத்தில் கடந்த 24 நாட்களுள் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 381 ஆகும்.

அதேவேளை இந்த வருடத்தில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,452 ஆகும்.

இந்த வருடத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 19,166 ஆகும். 

இரத்தினபுரி மாவட்டத்திலேயே எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இங்கு 1,159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right