(நா.தனுஜா)
அரசாங்கத்தை விமர்சிக்கின்ற அரசியல்வாதிகளை அடக்குமுறைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. எனவே இவ்விடயம் தொடர்பில் மக்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டும். இத்தகைய அடக்குமுறைகளால் ஒருபோதும் எதிர்க்கட்சியை வீழ்த்திவிட முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவிய வெள்ளை வேன் கலாசாரம் தொடர்பில் மக்களுக்கு நன்கு தெரியும் என்பதுடன், அதனால் காணாமல்போன சில நபர்கள் தொடர்பில் தற்போதுவரை எவ்வித தகவல்களும் இல்லாத நிலையே இருக்கிறது. அவ்வாறிருக்கையிலேயே தேர்தல் வேளையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரை சந்திப்பதற்கு வருகைதந்த இருவரும் தாம் வெள்ளை வேன் கடத்தல் விவகாரங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், இது குறித்து வெளிப்படுத்துவதற்கு ராஜித சேனாரத்னவை சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறும் கோரியிருக்கின்றனர். அதன் பிரகாரமே அவ்விகாரம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தது.
அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டுமக்கள் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. அதேபோன்று நாட்டின் நன்மைகருதி இவ்விடயம் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை அவ்விருவருக்கும் ராஜித சேனாரத்ன ஏற்படுத்திக்கொடுத்தார்.
நாட்டுமக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்தும் நோக்கிலேயே அதனைச் செய்தார். ஆனால் அவற்றை மனதிலிருத்திக்கொண்டு தற்போது பழிவாங்கல் செயற்பாடுகளை முன்னெடுப்பதென்பது ஒருபோதும் ஏற்றக்கொள்ளப்பட முடியாததாகும்.
சம்பிக்க ரணவக்கவிற்கும் இத்தகைய நடவடிக்கையொன்றே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM