ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் என அறியப்படும் அத்தநாயக்க முதியன்சலாகே நாமல் குமாரவுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து வட மேல் மாகாணத்தில், குருணாகல்,  வாரியபொல, நிக்கவரட்டிய, குளியாபிட்டிய, சிலாபம், பிங்கிரிய, தும்மலசூரிய,  நாத்தாண்டிய உள்ளிட்ட பகுதிகளில்  முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணையின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் இன்றைய தினம் மீண்டும் அவரை ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.