வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஓமந்தை பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த கப் ரக வாகனத்துடன் வவுனியாவி லிருந்து ஓமந்தை பகுதி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்  ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரே விபத்துக்குள்ளனா நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கடுமையான சேதத்திற்குள்ளாகியது.

குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.