தம்புள்ளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு எதிராக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று சுற்றுலாப் பயணிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்ட ஹோட்டலில் தாங்கள் 60 ஆயிரம் செலுத்தி தங்கியிருந்தபோதும் அதன் அறைகள் துர்நாற்றம் வீசுவதாகவும், அசுத்தமாக உள்ளதாகவும் குறிப்பிட்டே இந்த முறைப்பாடை அளித்துள்ளனர்.

அத்துடன் மழை காரணமாக ஹோட்டலின் அறைகள் நனைந்தமையினால் துர்நாற்றம் ஏற்பட்டதாகவும் அவர்கள் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்கண்ட முறைப்பாட்டை அளித்த மூன்று நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களுள் சட்டத்தரணியொருவரும், வைத்தியர் ஒருவரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.