கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் சூரிய கிரகணத்தை மக்கள் காணக்கூடிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன.

இரணைமடு சந்தியில் குறித்த சூரிய கிரகணத்தை மக்கள் காணக்கூடிய வகையில் பல்கலைக்கழக மாணவர்களால் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், சூரிய கிரகணத்தை முழுமையாக காணக்கூடியவாறு இன்றைய காலநிலை காணப்பட்டது.

சுற்றுலா பிரயாணிகள் பிரதேச மக்கள் என பலரும் சூரிய கிரகணத்தை நேரில் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.