மு.இராமசந்திரன்

டிக்கோயாவில் உள்ள பாடசாலை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

லுனுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மூங்கில் மேல் நின்று வேலை செய்துகொண்டிருந்த போது மின்சார கம்பியொன்று மூங்கில் மீது பட்டதால் மின்சாரம் தாக்கியுள்ளது.

 சடலம் டிக்கோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை அட்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.