கடற்றொழிலுக்காக படகில் கடலுக்கு சென்ற மீனவரின் படகு கவிழ்ந்ததில் மீனவர் காணாமல் போயுள்ளார்.

திருகோணமலை - கிண்ணியா கடற் பிரதேசத்தில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற மீனவரின் படகொன்று கவிழ்ந்ததிலேயே ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சேநுநுவர காவல்துறை தெரிவித்துள்ளது.

லங்கா பட்டணம் கடற்பகுதியில் நேற்று காலை மீன்பிடித்து கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

விபத்திற்குள்ளான படகில் நான்கு பேர் பயணித்துள்ள நிலையில், அதில் மூன்று பேர் நீந்தி கரைசேர்ந்துள்ளனர்.

அத்தோடு கிண்ணியா - மாஞ்சோலை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதோடு , அவரை தேடும் பணிகளில் கடற்படையினர் தீவிர தேடலில் ஈடுபட்டடு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.