கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் நேற்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பிற்கு தமது உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொணடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டார் .

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் மற்றும் உரிய பிரதேச செயலாளர்களும் உடன் சமூகமளித்திருந்திருந்தனர்.

 செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் சித்தாண்டி, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிரான் புலி பாய்ந்த கல் பால வீதியின் வெள்ள நிலமை மக்களின் போக்குவரத்து தொடர்பாகவும் ஓட்டமாவடி பிரதேச செயலார் பிரிவில் காவத்தமுனை போன்ற இடங்களுக்கு சென்று மக்களின் நிலமைகளை அவதானித்தார்.

 மேற்குறித்த பிரதேச மக்களுக்கான உலர் உணவுப்பொதிகளையும் வழங்கி வைத்தார்.

இதேவேளை கோறளை மத்தி பிரதேச செயலகத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள்.நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் உயர் அதிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது