(சதீஸ்)

மண்சரிவு அபாயம் காரணமாக பொகவந்தலாவை லொயினோன் தோட்ட மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு லொயினோன் தோட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

லொயினோன் தோட்டத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை சேர்ந்த 140 பேரை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் தோட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. எனினும் அவ்விடத்திலிருந்து வெளியேறாமல் மக்கள் தொடர்ந்தும் அதே இடங்களில் தங்கியுள்ளனர்.

இதேவேளை 2014ஆம் ஆண்டு தேசிய கட்டிட ஆய்வு மையம் இந்தப் பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.