மரம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது முறிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு , மற்றும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தல - கதிரகாமம் பிதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்து மோட்டார் சைக்கிள் மீதே இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதோடு , சம்பவத்தில் உயிரிழந்தவர் 36 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.