(எம்.மனோசித்ரா)

திருகோணமலை நிலாவெளி கடற் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த ஏழு பேர்  நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள், மீன்பிடிப்படகு மற்றும் மேலும் சில மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடல்வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி கடல்வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.