(இராஜதுரை ஹஷான்)

இந்நியாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தினால் அங்கு வாழும் இலங்கை அகதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புல்ல நிலையில் இப்பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் ஒருங்கினைப்பை ஏற்படுத்தி தீர்வினை எட்டுவதற்காக பிரதிநிதி ஒருவரின் பெயரை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும், இந்தியவாழ் இலங்கை அகதிகளை நாட்டிற்குள் மீளவரவழைத்து  அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும் என்று  நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இந்நிய  பாராளுமன்றத்தில்  அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டத்தில்  அங்கு வாழும் இலங்கை அகதிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யுத்தம் இடம் பெற்ற காலங்களில் அகதிகளாக  புலம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் இன்று   சர்வதேசத்தில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார்கள் என்பது இலங்கைக்கான பெருமையாகும்.

இந்தியாவில் இன்றும் அகதிகளாக வாழும் தமிழ் மக்களின் இருப்பு தொடர்பில் இன்று பாரிய சவால் எழுந்துள்ளன. யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்தியாவில்  அகதிகாக வாழும்  இலங்கை பிரஜைகளை மீண்டும் நாட்டுக்கு மீள்வரழைப்பதற்கான நடவடிக்கைகள் இரு நாடுகளுக்குமிடையில் முன்னெடுக்கப்பட்டன.  ஆனால் எதிர்பார்க்கப்பட்ட தீர்வு கிடைக்கப் பெறவில்லை.

 இலங்கை அகதிகளை  மீண்டும் தங்களின்  நாட்டிற்கு மீள் திரும்புவது சரியான தீர்மானமாக அமையும் என்று குறிப்பிடப்படுகின்றன. எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்கு   இரு நாடுகளையும் இணைக்கும் விதத்திலான ஒரு பிரதிநிதியை பெயர் குறிப்பிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரை செய்துள்ளேன்.

இலங்கை பிரஜைகள்  இந்நியாவில் அகதிகளாக அக்காலக்கட்டத்தில்  குடிப்பெயர்ந்தமைக்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆனால் தற்போது நிலைமை முழுமையாக மாற்றமடைந்து விட்டன. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்ற  பணிகள் துரிதப்படுத்தப்பட்டன என அவர் தெரிவித்தார்.