வடகொரியா தனது ஏவுகணை தொழிசாலையை மீண்டும் தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவானது தனது ஏவுகணை பரிசோதனைகளை மீண்டும் இயக்கி வருகின்றது.

இதற்கு அமெரிக்கா ,தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

அத்தோடு அமெ­ரிக்­கா­வுக்கும்  , வடகொரி­யா­வுக்­கு­மி­டையில் இடம்­பெ­ற­வி­ருந்த அணு­சக்தி பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்து ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்ள நிலை­யி­லேயே இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் சபையின் ஆதரவுடன் வட கொரியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

இதனால் வடகொரியா- அமெரிக்காவுக்கு இடையே போர் முழக்கமான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையிலேயெ வடகொரியா ஒப்பந்தத்தை மீறி மீண்டும் ஏவுகணை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது.

அத்தோடு மூடியிருந்த ஏவுகணை தொழிற்சாலையை செயற்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளமை அமெரிக்காவுக்கு அளிக்கும் கிறிஸ்துமஸ் பரிசு என வடகொரியா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.