2020ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் ஆரம்­ப­மா­கும் அவுஸ்­தி­ரே­லிய பகிரங்க கிராண்ட்ஸ்லாம் தொட­ருக்  ­கான பரிசுத் தொகை இது­வரை இல்­லாத அள­வுக்கு உயர்த்­தப்­பட்டுள்ளது.

அதன்படி 71 மில்­லியன் அவுஸ்­தி­ரே­லிய டொலராக அதா­வது அமெ­ரிக்க டொலரில் 49.1 மில்­லியனாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

பரி­சுத்­தொ­கை­யா­னது கடந்த தொட­ரை­விட 13.6 வீதம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் ஆடவர், மகளிர் பிரிவு சம்­பி­யன்­க­ளுக்கு 4.12 மில்­லியன் டொலர் பரிசுத் தொகை என்­பது குறைவாக அதி­க­ரிக்­கப்­பட்ட தொகையே.

மாறாக இறு­திக்கு முந்­தைய சுற்­று­களில் பங்­கேற்கும் வீரர்­க­ளுக்கு பரிசுத் தொகை சற்றுக் கூடு­த­லாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் படி முதல் சுற்­றி­லேயே தோற்று வெளி­யேறும் வீரர்­க­ளுக்கு 90,000 ஆஸி. டொலர், 2ஆவது சுற்றில் தோற்று வெளி­யேறும் வீரர்களுக்கு 128,000 ஆஸி. டொலர் என பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.