நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை

By Vishnu

25 Dec, 2019 | 11:37 AM
image

இந்த வருடத்தில் இடம்பெறவுள்ள இறுதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனை நாட்டு மக்கள் காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியலாளர் அனுர ஸ்ரீ பெரேரா தெரிவித்துள்ளார்.  

கிரகணம் ஏற்படும்போது, நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காமல் போவதால், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். இதைத்தான் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்கிறார்கள்.

கிரகணம் என்பது என்ன? 

கிரகணம் என்பது நிழல்தான். நிழலின் விந்தையான விளையாட்டே கிரகணம். சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால், பூமியில் விழும் சூரிய ஒளி தடுக்கப்பட்டு, நிலவின் நிழல் பூமியின் மேல் விழுகிறது. இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். சூரிய கிரகணம் மூன்று வகைப்படும். முழுச் சூரிய கிரகணம் , வளைய சூரிய கிரகணம் மற்றும் பகுதி சூரிய கிரகணம்.

சந்திரனின் நிழல் முழுதாக சூரியனை மறைத்தால், அது முழுச் சூரிய கிரகணம். நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்க முடியாமல், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்புவளையம் போல் காட்சியளிக்கும். இதை நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்கிறோம். சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படாமல், ஒளி குறைந்தாலும் வெளிச்சம் இருக்கும். சுனாமி என்ற கடல் பேரலை ஏற்பட்ட 15 வருடம் நிறைவடையும் தினத்திலேயே இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

இது வடமாகாணத்தில் வளைய சூரிய கிரகணமாகவும், கிளிநொச்சிக்கு கீழாக அநுராதபுரம், வுவுனியா போன்ற பிரதேசங்களில் அரைபகுதி நெருப்பு வளைய சூரிய கிரகணமாகவும் காட்சி அளிக்கும் என்றும் பெரேரா தெரிவித்தார். 

வளைய சூரிய கிரகணம் தெளிவாக காட்சியளிக்கும். அத்தோடு இந்த வளைய சூரிய கரகணத்தை நாளை காலை 8.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையிலான காலப்பகுயில் இலங்கையர்களினால் காணக்கூடியதாக இருக்கும்.

இந்த முழுமையான நெருப்பு வளைய சூரிய கிரகணம் சுமார் 4 நிமிடங்களுக்கு இடம்பெறக்கூடும். இது ஆக கூடுதலாக வவுனியாலில் காலை 9.00 மணிக்கு காட்சியளிக்கும். கிளிநொச்சியில் காலை 9.36 மணிக்கும், யாழ்ப்பாணத்தில் காலை 9.35 மணிக்கும் திருகோணமலையில் காலை 9.38 மணிக்கும் காட்சியளிக்கும். ஆத்தர்சி கிளாக் நிறிவனத்தின் மூலம் இந்த கிரகணத்தை அவதானிப்பதற்காக வடக்கில் பல இடங்களில் ஆய்வு மட்டத்தில் முகாம்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் ஊடக உதவிப்பணிப்பாளர் சிந்தன விஜயவர்தன தெரிவித்தார்.

இதேபோன்று மன்னார் வவுனியா, யாழப்பாணம் போன்ற நகரங்களை கேந்திரமாக கொண்டும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

இதனை நேரடியாக பார்ப்பது கண்களுக்கு பாதிப்பாக அமையும் என்பதினால் இதனை ஏற்ற வகையில் கருவிகளை பயனபடுத்தி பார்க்க வேண்டும். வெல்டிங் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 14 இலக்க கண்ணாடியை பயன்படுத்தி இதனை பார்வையிட முடியும். இந்த சூரிய கிரகணம் குறித்து சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆரோக்கியமேரி, 'டிசம்பர் 26 ஆம் திகதிநிகழும் சூரிய கிரகணம் ஒரு அரிதான வான் நிகழ்வு. இதை தமிழகத்திலும் காண முடியும் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாய்ந்தமருது கடற்பரப்பில் இயந்திரத்துடன் படகு மீட்பு

2022-10-06 13:33:37
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு நிபந்தனைகளை...

2022-10-06 13:31:12
news-image

லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி...

2022-10-06 12:50:07
news-image

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித்...

2022-10-06 12:48:22
news-image

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர்...

2022-10-06 12:14:12
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கையுடன்...

2022-10-06 11:59:25
news-image

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான...

2022-10-06 11:47:48
news-image

ஜெனீவா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும்- நாடு...

2022-10-06 11:09:34
news-image

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்கும்...

2022-10-06 11:09:53
news-image

பால் தேநீர், தேநீரின் விலைகள் குறைப்பு!

2022-10-06 10:56:22
news-image

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரம் -...

2022-10-06 10:52:59
news-image

ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட மூவருக்கு பூரண...

2022-10-06 11:46:55