Published by R. Kalaichelvan on 2019-12-25 10:20:46
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் போக்குவரத்து சேவையை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளி இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு விரைவான சேவையை வழங்கும் நோக்கோடு நாளை முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதிகளில் சாரதிகளுக்கான விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து நாட்டின் அனைத்து பாகங்களுக்கு பஸ் சேவைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.