(இராஜதுரை ஹஷான்)

சர்வதேசத்தின் மத்தியில் நாட்டின் இறையாண்மையினை இனி பேசுபொருளாக்குவதற்கு இடமளிக்க முடியாது என சர்வதேச  உறவுகள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறுகள் திருத்திக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.