(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி பக்க சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

அத்துடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இவர்களுக்கு எதிராக முறைப்பாடளிக்கவுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்கவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.