கண்டி, இரத்தினபுரி, கோலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆய்வு மையம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 


கண்டி மாவட்டத்தின் கங்ஹலகொரல பிரேதசபைக்கு உட்பட்ட பகுதி மற்றும் ஏனைய பிரதேசங்கள், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரில்ல, அயகம, கெஹலியகொட, இரத்தினபுரி குருவிட்ட பிரேதசபைக்குட்பட்ட பிரதேசங்கள், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ  பிரேதசபைக்குட்பட்ட பகுதியும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கேகாலை மாவட்டத்தின் தெரனியாகல, தெஹியோவிட, றுவான்வெல்ல, யட்டியந்தோட்டை, புளத்கொஹ{பிடிய, அரநாயக, கேகாலை, வரக்காபொல, ரம்புக்கன, மாவனெல்லை மற்றும் கலிகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள், அகலவத்த பலிந்தநுவர, வளல்விட, இங்கிரிய, மத்துகம மற்றும் புளத்சிங்ஹல பிரதேசங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படும்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.