யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் கடற்படையினரது பஸ்மோதியதில் வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்று வந்த மாணவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இன்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த உசாந்தி உதயகுமார் (வயது 15) என்ற மாணவியே உயிரிழந்தவராவார். 

இதேவேளை குறித்த விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஓட்டிச் சென்ற வாகன சாரதியை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு -ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சபேஷன் உத்தரவிட்டுள்ளார்.