அடுத்த பொதுத்தேர்­தலில் நீங்கள் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் இணைந்து போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­களா என்று பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின்  தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மனோ கணே­ச­னிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். 

மனோ கணே­சனின் பிறந்த தினத்தை முன்­னிட்டு அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்த போதே பிர­தமர் இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்ளார். 

தொலை­பே­சியில்  மனோ கணே­ச­னுக்கு வாழ்த்து தெரி­வித்த  பிர­தமர் பொதுத் தேர்­தலில்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் போட்­டி­யிடப் போகின்­றீர்­களா அல்­லது எங்­க­ளுடன்  போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­களா? அல்­லது  தனித்து போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­களா? என்று  கேள்வி எழுப்­பி­யுள்ளார். 

இதற்கு பதி­ல­ளித்த   மனோ கணேசன்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன்  ஏன் நான் போட்­டி­யி­ட­வேண்டும்.   எம்மிடம்  கட்சி உள்ளது. நாம் தனியாகவும்   போட்டியிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.