சிரியாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அரசு ஆதரவுப் பெற்ற மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் அந்நாட்டு தலைநகர் டமாஸ்கஸுக்கு தென்கிழக்கே அமைந்துள்ள அக்யூரபா பகுதியில் இரவு நேரத்தில் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் கொல்லப்பட்டவா்கள் சிரிய அரசுக்கு ஆதரவாகப் போரிட்டு வந்தள்ளனர். அவா்கள் சிரியாவைச் சோ்ந்தவா்கள் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஈரானில் இருந்து வந்த போராளிகள் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் அரசு ஆதரவுப் படை மற்றும் அரசுக்கு ஆதரவான ஈரானிய போராளிகளைக் குறிவைத்து இஸ்ரேல் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதற்கு முன்பு கடந்த நவம்பா் மாதம்  20 ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அரசு ஆதரவுப் படையினா் 20 போ் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.