நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலையில் அரிசியை விற்பனை செய்த 450 சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் நாடு முழுவதும் சுமார் 13,000 வர்த்த நிலையங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவ்வாறு 450 சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.