மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழி

By Daya

24 Dec, 2019 | 09:48 AM
image

தெற்காசியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது என வசுந்தரா தெரிவித்துள்ளார். 

அண்மைய ஆய்வின்படி கர்ப்பப்பை வாய் புற்றுநோயை விட, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதற்கு பெண்கள் தெற்காசிய உணவு முறை மற்றும் வாழ்க்கை நடைமுறையை பின்பற்றாமல், ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்வதும் ஒரு காரணியாக முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் மார்பகப்புற்றுநோயை இதனை தொடக்க நிலையில் கண்டறிந்தால் நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையாக குணப்படுத்தலாம் என்றும், இதனை வராமல் தடுக்க எளிய வழி உள்ளது என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பாரம்பரிய மரபியல் காரணங்களால் 90 சதவிகித பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் ஏற்படுவதில்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றம், மது பழக்கம், உடல் பருமன், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வது, உடற்பயிற்சியின்மை, 12 வயதுக்குள் பூப்பெய்துவது, ஈஸ்ட்ரோஜன் என்ற ஹோர்மோன் சுரப்பில் குறைபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, இரசாயனம் கலந்த உணவு பொருளை பயன்படுத்துவது என பல காரணிகளை இதற்கான காரணமாக சொல்லலாம்.

இதைத் தடுப்பதற்கு பல விடயங்கள் உள்ளன. குறிப்பாக பெண்கள் 25 முதல் 35 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வது நல்லது. இவர்கள் குழந்தை பெற்றதும் மார்பக காம்புகளில் உள்ள பால் சுரப்பிகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதுவரையிலும் வளர்ச்சியில் முழுமையடையாத செல்கள், பால் சுரப்பிற்கு பின்னர் வளர்ச்சியை எட்டுகிறது.

பிறகு அந்த குழந்தைக்கு இரண்டு ஆண்டு காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் அதன்போது மார்பகத்தில் உள்ள புற்றுநோயை உருவாகும் செல்களின் வளர்ச்சி தடை படுவதுடன், அதன் பாதிப்பும் குறைகின்றன.

புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் முக்கிய காரணிகளில் தாய்ப்பால் புகட்டுவதும் ஒரு காரணியாக இருக்கிறது. தாய்ப்பால் புகட்டுவது குறித்து மகப்பேறு வைத்தியர்கள் மற்றும் குடும்ப வைத்தியர்  களின் வழிமுறைகள் மற்றும் பரிந்துரைகளை தாய்மார்கள் உறுதியாகப் பின்பற்றினால், அவர்கள் மார்பக புற்று நோயிலிருந்து முழுமையாகப் பாதுகாக்கலாம்.

35 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகாலம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்திருந் தாலும், கண்டிப்பாக இரண்டு ஆண்டிற்கொரு முறை மம்மோகிரம் என பரிசோதனையை செய்து மார்பகப் புற்றுநோய் குறித்த நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right