இந்­திய பெருங்­க­டலில் சீன போர்க் கப்­பல்கள்

23 Dec, 2019 | 04:50 PM
image

-சுபத்ரா

தெற்­கா­சி­யா­வி­லேயே மிக உய­ர­மான, தாமரைக் கோபு­ரத்தின் திறப்பு விழா தொடர்­பாக, இலங்கை ஊட­கங்கள் கடந்த திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருந்த போது, இந்­தியப் பெருங்­க­டலில் இலங்கைக் கடற்­ப­ரப்­புக்கு அருகே சீன போர்க்­கப்­பல்­களின் நட­மாட்­டங்கள்  தொடர்­பான செய்­தி­களை இந்­திய ஊட­கங்கள், பர­ப­ரப்­புடன் வெளி­யிட்டுக் கொண்­டி­ருந்­தன.

356 மீற்றர் உயரம் கொண்ட தாமரைக் கோபு­ரத்தை அமைக்கும் பணிகள், 2012ஆம் ஆண்டு  மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில், தொடங்­கப்­பட்­டி­ருந்­தன.

அப்­போது இந்­தி­யாவைக் கண்­கா­ணிக்­கவே, சீனா இந்த உய­ர­மான கோபு­ரத்தை அமைக்­கி­றது என்றும், இந்தக் கோபு­ரத்தில் பொருத்­தப்­படும் கண்­கா­ணிப்புக் கரு­வி­களின் மூலம், தென்­னிந்­தி­யாவில் உள்ள இந்­தி­யாவின் கடற்­படை, விமா­னப்­படைத் தளங்­க­ளையும், கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்­க­ளையும் கண்­கா­ணிக்க முடியும் என்றும் இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன. 

ஆனால் அத்­த­கைய கண்­கா­ணிப்பு வச­திகள் ஏதும், தாமரைக் கோபு­ரத்தில் பொருத்­தப்­பட்­டுள்­ளனவா என்­பதை சுயா­தீ­ன­மாக உறு­திப்­ப­டுத்த முடி­யா­வி­டினும், இந்தக் கோபு­ரத்தின் மேல் தளத்தில், தொலைத்­தொ­டர்பு சமிக்­ஞை­களை பரி­மாறிக் கொள்­வ­தற்­கான கட்­ட­மைப்­புகள் தான் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

அவை தொலைக்­காட்­சிகள், வானொ­லி­களின் தகவல் தொடர்­பாடல் பரி­மாற்­றங்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி, புல­னாய்வுத் தகவல் பரி­மாற்­றங்­க­ளுக்கும் பயன்­ப­டுத்தக் கூடி­ய­வை­யாக இருக்கக் கூடும். இந்த தாமரைக் கோபுர திறப்பு விழா நடப்­ப­தற்கு சில மணி நேரங்கள் முன்­ன­தாக, சீன போர்க்­கப்­பல்­களின் நட­மாட்­டங்கள் தொடர்­பாக இந்­திய கடற்­படை வெளி­யிட்ட தக­வல்கள் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

இந்­தியப் பெருங்­க­டலில் ஒரே நேரத்தில் சீன கடற்­ப­டையின் ஏழு போர்க்­கப்­பல்­களைக் கொண்ட அணி கண்­கா­ணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதில் மிகப்­பெ­ரிய துருப்­புக்­காவி தரை­யி­றக்க கப்பல் ஒன்று இந்­தி­யா­வுக்கு மிக அரு­கி­லேயே காணப்­பட்­டுள்­ளது. அது இலங்கை கடல் எல்­லைக்­குள்ளே நுழைந்­தி­ருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

சீன போர்க்­கப்­பல்கள், கண்­கா­ணிப்புக் கப்­பல்கள் இந்­தியப் பெருங்­க­டலில் நட­மா­டு­வது புதிய விட­ய­மல்ல. 

2009ஆம் ஆண்­டுக்குப் பின்னர் இந்­தியப் பெருங்­க­டலில் சீன கடற்­படைக் கப்­பல்கள் அதிக­மாக நட­மாடத் தொடங்கி விட்­டன.

இந்­தியப் பெருங்­க­டலில் ஆதிக்கம் செலுத்­து­வது தான் சீனாவின் பிர­தான இலக்­காக இருந்­தது. அந்தக் கால­கட்­டத்தில் சோமா­லிய கடற்­கொள்­ளை­யரின் அச்­சு­றுத்­தல்கள் ஏடன் வளை­கு­டாவில் அதி­க­மாக இருந்­தன. 

அதனைச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு ஏடன் வளை­கு­டாவில், சீன கடற்­படை 2009 ஜன­வ­ரியில் இருந்து, இரண்டு போர்க்­கப்­பல்கள் மற்றும் ஒரு விநி­யோக கப்பல் என- மூன்று கடற்­படைக் கப்­பல்கள் அடங்­கிய அணியை கடற்­கொள்ளை எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்தி வரு­கி­றது. மாறி மாறி, சுழற்சி முறையில் இந்தப் பணிக்­காக, சீன போர்க்­கப்­பல்­களின் அணி இந்­தியப் பெருங்­க­டலைக் கடந்து செல்­வது வழக்கம். கடந்த 10 ஆண்­டு­களில் 33 கடற்­கொள்ளை எதிர்ப்பு அணி­களை, ஏடன் வளை­கு­டா­வுக்கு அனுப்­பி­யி­ருக்­கி­றது சீனா.

இதன்­மூலம், இது­வரை 65 சீன கடற்­படை அணிகள் இந்­தியப் பெருங்­க­டலை கடந்து சென்­றி­ருக்­கின்­றன. இவற்றில் குறைந்­த­பட்சம், 3 கப்­பல்கள் என்று பார்த்தால், 195 போர்­கப்­பல்கள் இருக்கும். இது குறைந்­த­பட்ச எண்­ணிக்கை.

அதி­கா­ர­பூர்­வ­மாக சீனா இந்தக் கப்­பல்­களை ஏடன் வளை­கு­டா­வுக்கு அனுப்­பி­னாலும், அதி­கா­ர ­பூர்­வ­மற்ற வகையில், பாரிய தரை­யி­றக்க துருப்­புக்­காவி கப்­பல்­க­ளையும், ஹெலி­கொப்டர் தாங்கி கப்­பல்­க­ளையும், நீர்­மூழ்­கி­க­ளையும் கூட இர­க­சி­ய­மான முறையில் அனுப்பி வரு­கி­றது.

2014ஆம் ஆண்டு கொழும்பு துறை­மு­கத்­துக்கு சீன நீர்­மூழ்கி கப்­பல்கள் கொழும்பு துறை­மு­கத்­துக்கு இரண்டு முறை வந்து சென்ற போதும், அவை கடற்­கொள்­ளை­ய­ருக்கு எதி­ரான நட­வ­டிக்­கையில் பங்­கேற்க வந்­த­வையே என்று சீனா கூறி­யி­ருந்­தது.

ஆனால், சீன கடற்­ப­டையின் அதி­கா­ர­பூர்வ கடற்­கொள்ளை எதிர்ப்பு அணியில் நீர்­மூழ்­கிகள் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்க விடயம்.

மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் ஆட்­சியில் இருந்த காலத்தில், சீனாவில் இருந்து ஏடன் வளை­கு­டா­வுக்கு செல்லும் போதும், அங்­கி­ருந்து திரும்பும் போதும், பெரும்­பாலும் சீன போர்க்­கப்­பல்­களின் அணி, விநி­யோகத் தேவை­க­ளுக்­காக கொழும்பு துறை­மு­கத்தை நாடு­வது வழக்கம்.

தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்­னரும், சீன போர்க்­கப்­பல்கள் கொழும்பு வந்து சென்­றி­ருந்­தன.   ஆனால் இப்­போது அவற்றின் எண்­ணிக்கை குறைந்து விட்­டது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம், சீன நீர்­மூழ்கி கப்பல் ஒன்று கொழும்பில் தரித்து செல்­வ­தற்கு அனு­மதி கேட்­டி­ருந்­தது. அதற்கு அர­சாங்கம் அனு­மதி கொடுக்க மறுத்த நிலையில், சீன போர்க்­கப்­பல்­களின் வருகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஜிபோட்­டியில் சீனா ஒரு பாரிய கடற்­படைத் தளத்தை அமைத்­தி­ருக்­கி­றது, கடற்­கொள்­ளை­ய­ரிடம் இருந்து தமது கப்­பல்­களைப் பாது­காப்­ப­தற்­காக என்றே இந்த தளத்தை சீனா அமைத்­தது,

எனவே, விநி­யோகத் தேவை­க­ளுக்­காக கொழும்பு அல்­லது ஏனைய தெற்­கா­சிய துறை­மு­கங்­களை நாடிச் செல்­லா­ம­லேயே சீன போர்க்­கப்­பல்­க­ளினால் இந்­திய பெருங்­க­டலை கடந்து செல்ல முடியும்.

ஜிபோட்­டியில் ஒரு பாரிய தளத்தைக் கொண்­டுள்ள போதும், இந்­தியப் பெருங்­க­டலில் சீன போர்க்­கப்­பல்­களின் நட­மாட்டம் குறை­ய­வில்லை. அதி­க­ரித்துக் கொண்டே வரு­கி­றது.

இதனை இந்­தியா தனக்­கான அச்­சு­றுத்­த­லா­கவே பார்த்து வரு­கி­றது, 2009ஆம் ஆண்டில் இருந்தே, இந்­தியப் பெருங்­க­டலில் சீனா கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்து விட்­டது. 

சீனா கட்டி வரு­கின்ற மூன்­றா­வது பாரிய விமா­னந்­தாங்கி கப்­பலைக் கூட இந்­தியப் பெருங்­க­டலில் நிறுத்தும் திட்­டத்­தையே கொண்­டி­ருக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில், மலாக்கா நீரி­ணையைக் கடந்து, இந்­தியப் பெருங்­க­டலில் நுழை­கின்ற சீன கப்­பல்­க­ளையும், ஹோர்மூஸ் நீரி­ணையைக் கடந்து இந்­தியப் பெருங்­க­ட­லுக்குள் நுழையும் சீன கப்­பல்­க­ளையும், இந்­தியா தொடர்ச்­சி­யாக கண்­கா­ணித்து வரு­கி­றது.

இந்த ஆழ்­கடல் கண்­கா­ணிப்பு வச­தி­களை இந்­தியா அண்­மைக்­கா­லத்தில் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது, அதற்­காக அமெ­ரிக்­கா­விடம் இருந்து, பி-8 பொசிடோன்  கண்­கா­ணிப்பு விமா­னங்­க­ளையும் இந்­தியா பெற்­றி­ருக்­கி­றது.

இந்­தியப் பெருங்­க­டலில் நூற்­றுக்­க­ணக்­கான கப்­பல்கள் தினமும் பய­ணிக்­கின்­றன. அவற்றில் வெளி­நா­டு­களின் போர்க்­கப்­பல்­களும் அடங்­கு­கின்­றன.

இவற்றைக் கண்­கா­ணிப்­ப­தற்­காக இந்­தியா அண்­மையில் ஒரு கண்­கா­ணிப்பு கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யது, வரு­டத்தின் 365 நாட்­களும், 24 மணி நேரமும் இயங்கும் வகையில், கடல்சார் தகவல் முகா­மைத்­துவ பகுப்­பாய்வு மையம் என்ற பெயரில் இந்த கட்­ட­மைப்பு குரு­கி­ராமை தலை­மை­ய­க­மாக கொண்டு இயங்­கு­கி­றது. 

பிராந்­திய கடல்­ப­ரப்­புக்குள் நுழை­கின்ற கப்­பல்கள் தொடர்­பான தக­வல்கள் இந்த கட்­ட­மைப்­புக்கு சிங்­கப்பூர், வியட்நாம் போன்ற நட்பு நாடு­க­ளிடம் இருந்தும் கிடைத்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்தக் கட்­ட­மைப்­பு­களின் மூலம், சீன போர்க்­கப்­பல்­களின் நட­மாட்­டங்கள், மற்றும் அவற்றின் செயற்­பா­டு­களை இந்­தியா தொடர்ச்­சி­யாக கண்­கா­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

இந்த வலைப்­பின்­ன­லுடன் இணைக்­கப்­பட்­டுள்ள, இந்­திய கடற்­ப­டையின், நீர்­மூழ்கி எதிர்ப்பு போர்­முறை வச­தி­களைக் கொண்ட. பி-8 கண்­கா­ணிப்பு விமா­னமே, சீன கப்­பல்­களின் அணியை இந்த மாதம் கண்­கா­ணித்­தி­ருக்­கி­றது.

ஏடன் வளை­கு­டாவில் கடற்­கொள்ளை எதிர்ப்பு நட­வ­டிக்­கையை முடித்து விட்டுத் திரும்பும் சீன கடற்­ப­டையின் 32 ஆவது அதி­ர­டிப்­படை அணியும், அங்கு பாது­காப்புப் பணியை ஆரம்­பிக்கச் செல்லும், 33 ஆவது அதி­ர­டிப்­படை அணி­யுமே கண்­கா­ணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 

இவற்றில் ஆறு கப்­பல்கள் உள்ள நிலையில், ஏழா­வ­தாக உள்ள கப்பல் பற்­றியே இந்­திய கடற்­படை தரப்பில் அதிக கரி­சனை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்­திய கடற்­படை வட்­டா­ரங்­களை மேற்­கோள்­காட்டி வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­க­ளின்­படி, Xian-32 என்ற 27 ஆயிரம் தொன் எடையைத் தாங்கும் வலிமை கொண்டு துருப்­புக்­காவி தரை­யி­றக்க கப்­பலே (Landing Platform Dock) இது என்று, கூறப்­பட்­டுள்­ளது. 

ஆனால், இந்­தியக் கடற்­ப­டை­யினால் எடுக்­கப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டுள்ள படங்­களின் படி, இந்தக் கப்பல், சீன கடற்­ப­டை­யிடம் உள்ள ஆறு Type 071 amphibious transport dock வகையைச் சேர்ந்த கப்­பல்­களில் ஒன்­றான, 989 என்ற இலக்­க­மு­டைய, Changbai Shan என்ற போர்க்­கப்­ப­லாக இருக்­கலாம் என்றே கரு­தப்­ப­டு­கி­றது.

இது, நான்கு ஹெலி­கொப்­டர்­களை நிறுத்தி வைக்கும் வச­தி­க­ளையும், ஒரே நேரத்தில் இரண்டு ஹெலி­கொப்­டர்­களை தரை­யி­றக்கும் வகையில் இரு இறங்கு தளங்­க­ளையும், கொண்­டது. 

அத்­துடன் 600 தொடக்கம் 800 வரை­யான துருப்­பு­க­ளையும், அவர்­க­ளுக்­கான ஆயு­தங்கள், வாக­னங்கள், போர்த்­த­ள­பா­டங்­க­ளையும் நகர்த்திச் சென்று தரை­யி­றக்கக் கூடிய எல்லா வச­தி­க­ளையும் கொண்­டி­ருக்­கி­றது.

சீன கடற்­படை மர்­மங்கள் நிறைந்­தது. அதன் போர்த்­த­ள­பா­டங்கள் குறித்த எந்த முழு­மை­யான- உண்­மை­யான அதி­கா­ர­பூர்வ தக­வ­லையும் வெளி­யி­டு­வ­தில்லை. பல போர்க்­கப்­பல்­களின் பெயர்­க­ளையும், இலக்­கங்­க­ளையும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் வெளி­யி­டு­வதும் சீனாவின் வழக்கம்.

அத­னிடம் எந்த வகை­யான- எத்­தனை போர்க்­கப்­பல்கள் உள்­ளன என்ற குழப்பம் இருக்­கின்ற நிலையில், இந்­திய கடல் எல்­லைக்கு அருகே- காணப்­பட்­ட­தாக இந்­திய கடற்­ப­டையால் கூறப்­பட்ட Xian-32 கப்பல் தொடர்­பான சந்­தே­கங்கள் இருப்­பது சாதா­ரண விட­யமே.

இந்தக் கப்பல் இலங்கை கடல் எல்­லைக்குள் நுழைந்­துள்­ள­தா­கவும் கடந்த வாரம் இந்­திய ஊட­கங்கள் தெரி­வித்­தி­ருந்­தன. ஆனால், சீன கடற்­படைக் கப்பல் எதுவும் இலங்கை துறை­மு­கத்­துக்கு வந்­த­தாக தக­வல்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இலங்கை துறை­மு­கங்­களை பயன்­ப­டுத்­தா­விடின், இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் இவை ஏன் வந்­தன, இதற்கு அனு­ம­தியை இலங்கை அர­சாங்கம் கொடுத்­ததா என்ற கேள்­விகள் உள்­ளன.

இந்தக் கப்­பலின் நட­மாட்­டத்தை இந்­தியா உன்­னிப்­பாக கண்­கா­ணிக்­கி­றது. ஏனென்றால், இந்த கப்­பல்­களின் அணியை கண்­ட­றி­வ­தற்கு இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் தான், இந்­தியப் புல­னாய்வு அமைப்­புகள் ஒரு எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருந்­தன.

இந்­தி­யாவின் கடற்­படைத் தளங்கள் மற்றும் இந்­தி­யாவின் போர்க்­கப்­பல்கள் நிறுத்­தப்­பட்­டுள்ள இடங்­களை கண்­கா­ணிக்க, சீனா தொடர்ச்­சி­யாக கண்­கா­ணிப்புக் கப்­பல்­களை அனுப்பிக் கொண்­டி­ருக்­கி­றது என்ற தக­வலே அது.

அண்­மையில், Dongdiao வகையைச் சேர்ந்த, சீனாவின் பிந்­திய புல­னாய்வு தகவல் சேக­ரிப்பு கப்­ப­லான, Tianwangxing இந்­தியப் பெருங்­க­டலில் கண்­கா­ணிப்பில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது,

இந்தக் கப்பல், இந்தியாவின் பொருளாதார கடல் எல்லைக்குள் நுழைந்து, சில நாட்கள் தங்கியிருந்துள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகே, இந்தியாவின் கிழக்கு கடல் எல்லைக்கு அண்மையாக இந்தக் கப்பல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து,  இந்தியா இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது.  இவ்வாறான நிலையில், தான், இலங்கை கடற்பரப்புக்குள் சீன கடற்படைக் கப்பல் கண்டறியப்பட்டது. 

ஏற்கனவே, சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டங்களால் தான், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், 2014இல் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன.

மீண்டும் இலங்கை கடற்பரப்பை, இந்தியாவின் பாதுகாப்பு நிலைகளை கண்காணிக்க, சீன போர்க்கப்பல்கள்  பயன்படுத்த முனையும் போது, அது மீண்டும் இந்திய- இலங்கை இடையிலான நம்பிக்கையீனம் மற்றும் முரண்பாடுகளுக்கே வழிசமைக்கும்.

அதுவும், ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக, சீனா நிதியைக் கொட்டுவதாக வெளியாகிய தகவல்களின் பின்னணியில் இந்த தலையீட்டை சாதாரணமான விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டிசம்பர் என்கின்றது - உறுதியாக...

2022-09-29 15:08:23
news-image

யார் இந்த பொன்னியின் செல்வன்?

2022-09-29 15:25:42
news-image

முதல் முறையாக விண்கல்லை திசை திருப்பிய...

2022-09-29 13:18:27
news-image

உடையால் பற்றி எரியும் ஈராக் :...

2022-09-29 13:18:49
news-image

கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதால் யாருக்கு இலாபம் ?

2022-09-29 12:26:33
news-image

மீண்டும் களத்தில் இறங்கும் சந்­தி­ரிகா

2022-09-29 12:26:16
news-image

சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்த தகவல்...

2022-09-28 12:40:54
news-image

இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…?

2022-09-28 10:14:28
news-image

மலையக சமூகம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதியின்...

2022-09-28 10:10:48
news-image

அடையாளம் தான் துறப்போம். எல்லா தேசத்திலும்...

2022-09-27 09:27:02
news-image

ஐ.எம்.எப். கடனை தாண்டிய இந்தியாவின் டொலர்...

2022-09-26 10:53:34
news-image

இந்தியா இலங்கைக்கு பலமாக இருக்கின்றது :...

2022-09-25 15:44:19