( சசி )

மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் விஜயபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

மட்டக்களப்பு பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  ஜெயந்திபுரம் – விஜயபுரம் இலக்கம்  114,  இரண்டாம் குறுக்கு வீதியை சேர்ந்த  ரட்ணராஜா ராஜா வயது 43 என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

இவரது மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .