பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு சவூதி அரேபியா நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி துருக்கியின்  இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதிஅரேபிய தூதரகத்திற்கு சென்ற அவர் மர்மமாக கொலை  செய்யப்பட்டார்.

சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி  துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட நிலையில் அதற்கான பல ஆதாரங்கள் சிக்கின.

அந்நாட்டு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு சவூதி அரேபிய நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.